ஊத்தங்கரையில் ஒட்டர் போயர் உள்ளிட்ட 68 சமூகத்தினரை சீர்மரபினர் பட்டியலில் இருந்து, சீர்மரப்பினர் பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றம் செய்த தமிழக அரசுக்கு வீர போயர் பேரவையினர் நன்றியை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வீர போயர் இளைஞர் பேரவை சார்பில் போயர் ஒட்டர் உள்ளிட்ட 68 சமூகத்தினரை சீர் மரபினர் பட்டியலில் இருந்து, சீர்மரப்பினர் பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு பழைய அரசாணையை ரத்து செய்து, மீண்டும் சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது.
இதையடுத்து வீர போயர் இளைஞர் பேரவையினர் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தமிழக அரசிற்கு தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Discussion about this post