ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் வேதாந்தா நிறுவனம், விதிகளை பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது, தமிழகத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் உரிய விதிகளை வேதாந்தா நிறுவனம் பின்பற்றவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து விசாரணை நாளையும் தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசு மீண்டும் தனது வாதத்தை நாளை முன் வைக்கும். இதைத்தொடர்ந்து, வேதாந்தா குழுமம் தனது வாதத்தை முன் வைத்த பிறகு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post