வட்டெழுத்துக்களை வாசிக்க புதியவழி! சாமானியரும் படிக்கலாம் இந்த SOFTWARE-ல்!

தமிழ் கல்வெட்டுகளில் உள்ள வட்டெழுத்துகளை படிக்க புதிய மென்பொருள் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியானது  எழுத்தாக்கம் பெற்றபோது முதலில் தமிழி எனும் தமிழ் பிராமி எழுத்துகளாகவும், பின் வட்டெழுத்து, தற்கால எழுத்துகளாகவும் உருமாறி பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால் நமது வரலாற்றை நாம் தெரிந்துகொள்வதற்கு முதலில் கல்வெட்டுகளை வாசிக்கவும், அதில் உள்ள வட்டெழுத்துக்களை வாசிக்கவும் பழக வேண்டும்.

இந்த வட்டெழுத்து முறையானது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை பரவலாக தமிழகத்திலும், தற்போதைய கேராளவிலும் வழக்கத்தில் இருந்தது. அதற்கு முன் குகைகளிலும் கற்பாறைகளிலும் ஓவியங்களைத் தீட்டி வருங்கால சந்தினருக்கு தங்களுடைய வேட்டையாடுதல், விவசாயம் ஆகியவற்றை பழக்கினார்கள். பிறகுதான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான். பின்னர் மொழியை எழுதுவதற்கு எழுத்துமுறையைக் கண்டுபிடித்தான். அப்படி ஆதிகாலத்தில் உருவானதுதான் வட்டெழுத்துக்கள் ஆகும்.

வட்டெழுத்தினை வாசிக்க புதிய மென்பொருள்.!

இந்த வட்டெழுத்துக்களை கல்வெட்டு ஆய்வாளர்களால் மட்டுமே படிக்க முடியும் என்பதால் பல கல்வெட்டுகள் சாமானியர்களால் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் வீணாகி உள்ளன. மீதமுள்ள கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த மென்பொருளின் விசேசம் என்னவென்றால், இந்தில் வட்டெழுத்து கல்வெட்டின் புகைப்படத்தை பதிவெற்றினால், அதில் உள்ள எழுத்துருக்களை, தற்கால தமிழ் எழுத்து வடிவில் மாற்றி தந்துவிடும்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளில் இரண்டு வகை எழுத்துருக்களை அடையாளம் காணும் வகையில், சிவகாசி வேள்விக்குடி வட்டெழுத்து படிப்பான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது, ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கப்பட உள்ளது.

Exit mobile version