திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா, இன்று வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதனையொட்டி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், 24,555 வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில், 90 இடங்களில் வாகன நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, 470 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 45 பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரம், நான் உங்களுக்கு உதவலாமா என 35 மையங்களும், 18 மருத்துவக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில், குழந்தைகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள, 15 டிராக்கிங் மையங்கள், மற்றும் பயோ மேட்ரிக் பேஸ் டெக்னாலஜி என புது, புது டிராக்கிங் சிஸ்டம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், 15 பேருந்து நிலையங்கள், 2,650 பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. மேலும், 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
Discussion about this post