வந்தே பாரத்:
பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு வகை வசதிகளைக் கொண்டு ஐ.சி.எஃப்-ல் வடிவமைக்கப்பட்டதுதான் வந்தே பாரத் விரைவு ரயில் என அழைக்கப்படும் ரயில் 18 (Train-18) இது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் பகல் நேர குறுகிய தூர ரயில் சேவை ஆகும்.இந்த ரயில் சேவையனது சிறந்த உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய தேசிய திட்டம் ஆகும். இந்த திட்டமானது இந்தியாவின் முதலீட்டை எளிதாக்குவதற்கும், திறனை மேம்படுதுவதற்கும், புதுமைகளை வளர்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த வகையில் ரயிலின் வேகத்தை அதிகரித்து குறுகிய தூரம் இயங்கும் ரயில் சேவை இதுவே ஆகும். ஒருங்கிணைந்த பெட்டி (Integral Coach Factory) தொழிற்சாலை தயாரிப்பு இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவஹர்லால் நேருவால் 1955- ஆம் ஆண்டு அக்டோபர் 2 நாளில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொழிற்சலைகள் எங்கு உள்ளது என்றால் சென்னை மற்றும் பெரம்பூரில் அமந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் தான் வந்தே பாரத் ரயில் சேவை தயாரிக்கப்பட்டது. மேலும் இதியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் ஆனது முதன் முதறையாக உத்திர பிரதேசத்தில் 2018-ஆம் ஆண்டு மொராதாபாத்தில் நடந்த சோதனையில் வெற்றிப் பெற்றது. இதனை அடுத்து தான் வந்தே பாரத் ரயிலுக்கு ட்ரயின் 18 (trin18) என்ற மறுபெயரும் வந்தது.
கட்டணம் குறைப்பு:
இந்த, வகையில் இதற்கான பயண கட்டணம் என்பது இதற்கு ஏற்றது போலவே உள்ளது. எளிய மக்கள் பயணிக்கும் வகையில் இல்லாமல் கூடுதலாக கட்டணம் உள்ளதாக தெரிவிக்கின்றனர் பொதுமக்கள். சதாப்த்தி, தூரந்தோ ரயில், ஆகிய ரயில்களில் வெவ்வேறு டிக்கெட் கட்டணங்களில் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஏசி ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கான கட்டணம் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் பயணிகள் இடையே ஆர்வம் குறைந்தது, ஏசி ரயில் பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தும் வருகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணம், விளையாட்டு வீரர்களுக்கா சலுகை கட்டணம் என அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டதாலும் ஏசி ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. ஒரு சில ரயில்களில் 50 விழுக்காட்டுக்கும் குறைவான பயணிகளுடன் சில ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, டிக்கெட் கட்டணத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளனர்.
ஏசி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான கட்டணத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி விரைவு ரயில் ஏசி இருக்கை வசதி, சதாப்தி, தூரந்தோ போன்ற ரயில்களில் இருக்கை வசதி பயணத்துக்கான டிக்கெட் கட்டணம் 25 சதவீத குறைப்பு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Discussion about this post