பாலியல் குற்றம் கூறுபவர்கள் உண்மை இருந்தால் வழக்கு தொடரலாம், அதை சட்டப்படி சந்திக்க தயார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பாடகி சின்மயி மீ டூ ஹாஷ் டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது குறித்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ள வைரமுத்து, தன் மீதான குற்றச்சாட்டு உள்நோக்கம் உடையவை என தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டியவர்கள் முறையாக வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொள்ள தாம் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளதாக குறிப்பிட்ட வைரமுத்து, உண்மை வெளி வரும் முன்பு தன்னை நல்லவரா? கெட்டவரா? என யாரும் முடிவுக்கு வரவேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.