திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 8ம் திருநாளில், நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, மார்பில் மகாலட்சுமி பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்களை சாற்றியபடி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
பகல்பத்து உற்சவ காலத்தில் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து பல்வேறு விதமான அலங்காரத்தில் பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து வந்து, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்துவருகிறார். அதன்படி, 8ஆம் நாளான இன்று நம்பெருமாள் முத்துப் பாண்டியன் கொண்டை, மார்பில் மகாலட்சுமி பதக்கம், வைர அட்டிகை, ரத்தின அபயஹஸ்தம், கல் பதித்த ஒட்டியாணம், முத்துமாலை, தங்க அரைநெல்லி மாலை உள்ளிட்ட திருவாபரணங்களை சாற்றியபடி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Discussion about this post