அய்யா வைகுண்டசாமி கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 நாட்கள் நடைபெரும் இந்த விழாவையொட்டி, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளும், வாகன பவனியும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். மேலும், நாள்தோரும் அங்குள்ள கலையரங்கில் நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும், கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தருகின்றனர். இதனையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version