பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மதிமுக தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
7 பேர் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் தாமதம் செய்வதாகவும், அவர் ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். அப்போது பேசிய வைகோ, 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.