முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர்வரத்து தொடர்ந்து வருவதான் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 30 அடியை எட்டியுள்ளது.
இந்தாண்டு பருவ மழை குறைந்ததால், வைகை அணையின் நீர்மட்டம் 26 அடிக்கும் கீழ் குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தேக்கடி முல்லைப் பெரியாறு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறிலிருந்து இருந்து 300 கன அடி தண்ணீர், வைகை அணைக்கு திறந்து விடப்பட்டது. இதனையடுத்து வைகை அணையின் நீர்மட்டம் 30 அடியை தாண்டியது.
தற்போதைய நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு 156 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 30.12 அடியாகவும் உள்ளது. மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது