பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறப்பு

தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து 3 மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவுப்படி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் வைகை அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீரை திறந்து வைத்தார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிகளவில் உயர் மகசூல் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version