கோவை மாவட்டம் அரசிபாளையம் பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் முதலித்தில் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை, அரசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் என செய்தி தாள்களில் வெளியான தகவலை அடுத்து, அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன் அதிகாலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால் 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அரிசிபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் திமுகவை சேர்ந்த கணேசன் என்பவர் தடுப்பூசி
டோக்கனை வெளிச்சந்தையில் விற்பதாக அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில்
ஈடுபட்டமக்கள்.
Discussion about this post