தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் தற்போதுவரை மொத்தமாக 1,59,26,860 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் இன்றுவரை 1,60,84,347 தடுப்பூசி செலுத்தி போடப்பட்டுள்ளது
மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் இரண்டில் இருந்து மொத்தமாக தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகள் நிலவரம்:
கோவாக்சின் – 25,85,300
கோவிஷூல்டு – 1,33,41,560
மொத்தம் வருகை – 1,59,26,860
நேற்று வரை மொத்தம் தடுப்பூசி செலுத்தப்பட்டது – 1,60,84,347
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரக்கூடிய சூழலில் ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசி வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை சார்பாக தெரிவித்திருக்கும் நிலையில் 10,36,610 தடுப்பூசி வந்துள்ளது.
மேலும், நேற்று தமிழக அரசின் கையிருப்பில் 1,74,730 தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்து இருந்த நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,25,945 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இருந்தாலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தடுப்பூசி மையங்களில் காலை முதலில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.