வாத்தி.. பாஸா? பெயிலா?…Spoiler Alert!

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் வாத்தி. இத்திரைப்படத்தில் தனுஷ் உதவி ஆசிரியராக நடித்திருக்கிறார். அரசுப் பள்ளிகளின் தரத்தை குறைத்து தனியார் பள்ளியின் தரத்தை அதிகரித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் சமுத்திரகனி. தனுஷ் வேலை பார்க்கும் பள்ளியின் தலைமை நிர்வாக பொறுப்பில் இருக்கும் சமுத்திரகனி அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தினால் தனுஷை அரசுப் பள்ளிக்கு அனுப்புகிறார். அங்கு இடை நிற்றலினால் படிக்காமல் போன மாணவர்களை அரசுத் தேர்வில் வெற்றி பெற செய்துவிடுகிறார் தனுஷ். அதனால் பதறிப்போன சமுத்திரக்கனி, மக்களுக்கு அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டுவிடும் என்பதால் தனுஷை அந்தப் பள்ளியைவிட்டு விரட்ட எண்ணுகிறார். தனுஷ் இந்த பிரச்சனையை எவ்விதம் சமாளித்தார் என்பதே மீதமுள்ள திரைக்கதை.

தனுஷ் ஒரு ஆசிரியராக நன்றாகவே பொருந்துகிறார். ஆனால் பாரதியார் வேஷம்தான் பொருத்தமாக இல்லை. கதநாயகி சம்யுக்தா மேனன் ‘வா வாத்தி’ பாடலில் ஜொலிக்கிறார். ஆனால் வாய்ஸ் சிங்க் இல்லை. சமுத்திரகனி வரும் எல்லாம் தெலுங்கு படங்களிலும் ஒரே மாதிரியான வில்லனாகவே நடிக்கிறார். அவரை தெலுங்கு சினிமா வீணடிப்பது போல தெரிகிறது. ஜிவி பிரகாஷ் குமாரின் இசை ரொம்ப நாட்களுக்குப் பிறகு முணுமுணுக்க வைக்கிறது. வெங்கி அட்லூரி இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். உண்மையில் இந்த கரு பேசப்படவேண்டிய கருதான். ஆனால் அதனை கொண்டு சென்ற விதம் அங்கங்கே தடுமாறுகிறது. சில நேரங்களில் இந்தியில் வெளியான ’சூப்பர் 30’ திரைப்படத்தைப் போன்ற காட்சிகள் உள்ளன. தமிழில் இந்தப் படம் வந்தாலும் முழுக்க முழுக்க தெலுங்கு வாடையே அடிக்கிறது. பார்டரில் வந்து பாஸாகியுள்ளது இந்த வாத்தி.

Exit mobile version