ஹத்ராஸ் சம்பவத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அலட்சியமாக நடந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் உள்பட 4 காவலர்களை பணி இடைநீக்கம் செய்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மேலும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டக் காவலர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.