உத்தர பிரதேச மாநிலத்தில் 128 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்தும் படி முதியவர் ஒருவருக்கு ரசீது வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹாபூர் மாவட்டத்தில் உள்ள சாம்ரி கிராமத்தை சேர்ந்த ஷமீம் என்ற முதியவர் வீட்டில் ஒரு மின் விசிறி, மின் விளக்கு மட்டுமே உள்ளது. சராசரியாக மாதம் 700 ரூபாய் மின் கட்டணம் வரும் நிலையில், தற்போது 128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு ரசீது வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முதியவர், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார். மின் கட்டணத்தை செலுத்தவில்லை என்றுக் கூறி மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டதாக முதியவர் ஷமீம் புகார் கூறுகிறார். இதனிடையே, தொழில்நுட்ப கோளாறால் இந்த தவறு நடந்ததாக விளக்கம் அளிக்கும் மின்வாரிய அதிகாரிகள், ரசீதுடன் முதியவர் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் தவறு சரி செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.