மின்வாரியத்தின் கணக்கீட்டு முறையில் எந்த விதிமீறலும் இல்லை – மறுசீராய்வு மனு தள்ளுபடி

மின்வாரியத்தின் கணக்கீட்டு முறையில் எந்த விதிமீறலும் இல்லை என்று தெரிவித்து, மின் கணக்கீட்டு முறைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கின் காரணமாக மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மின் கணக்கீடு நடைபெறவில்லை. பிப்ரவரி மாதம் என்ன மின் கட்டணம் பயனாளர்களால் செலுத்தப்பட்டதோ அதே மின் கட்டணத்தின் அடிப்படையில், மார்ச் ஏப்ரல் மாதத்திற்கு செலுத்த வேண்டும் என்றும், பின்னர் மின் கணக்கீடு எடுக்கப்பட்டு தொகை சரிசெய்யப்படும் என்றும், மின் வாரியம் தெரிவித்திருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்வாரியக் கணக்கிடும் முறையில் எந்த விதி மீறலும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மறுஆய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் அமர்வு, மறுஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Exit mobile version