உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த சாதாரண மனிதர்..

உலகிலேயே அதிக வேகத்தில் ஓடக்கூடியவர் என்றால் அது உசைன் போல்ட் தான். அவரின் சாதனையை நன்கு பயிற்சி எடுத்தவர்களே முறியடிக்க முடியாத நிலையில் சாதாரண கிராமத்து மனிதர் ஒருவர் முறியடித்துள்ளார். எப்படி என்று கேட்கிறீர்களா?

கர்நாடக மாநிலத்தில் பாரம்பரியமான எருமை பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்தப்  பந்தயமானது ஜல்லிக்கட்டு விளையாட்டை போன்ற இளைஞர்களின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கம்பாலா பந்தயத்தில் சீனிவாசன் கவுடா என்ற 28 வயது இளைஞர்  கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் போட்டி தூரமான 142.50 மீட்டரை  13.62 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். மேலும் 142.5 மீட்டரில் ஓடியதை 100 மீட்டர் தூரத்திற்கு கணக்கிட்டுப் பார்த்தபோது அவர் அந்த தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து உள்ளார். ஆனால் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை கடக்க 9.58 வினாடிகள் எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை பார்த்த பலரும் சீனிவாசன் கவுடாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

Exit mobile version