முழு ஊரடங்கு அமலில் உள்ள மாவட்டங்களில் வங்கிகள் இன்று இயங்கும்!

முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வங்கிகள் இன்றும், நாளையும் செயல்படுகின்றன.கொரோனா பாதிப்பு அதிகரித்தை அடுத்து சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் மதுரையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு வெளியிட்ட முழு ஊரடங்கு வழிமுறைகளில் பொதுமக்களின் நேரடி வங்கி சேவைக்கு அனுமதி இல்லை எனவும், ஏ.டி.எம். மையங்கள் வழக்கம்போல் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாத இறுதி நாட்கள் என்பதால் இன்றும், நாளையும் நேரடி வங்கி சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து வங்கிகளும் இன்றும், நாளையும் செயல்படுகின்றன. 33 சதவீத ஊழியர்களுடன் அரசு வழிமுறைகளை கடைபிடித்து மாலை 4 மணி வரை இயங்குகின்றன.

Exit mobile version