ஆன்லைன் வீடியோ தளமான யூ ட்யூப், சில மணி நேரம் முடங்கியதால், விரக்தியடைந்த பயனாளர்கள் யூ ட்யூப்பை கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். உலகம் முழுவதும் பல பயனாளர்கள் யூ ட்யூப்பின் முகப்பு பக்கம் தெரியவில்லை எனவும், பலர் தங்களுக்கு, யூ ட்யூப் வீடியோ தள செயலியே திறக்கவில்லை எனவும் டிவிட்டரில் தெரிவித்திருந்தனர். இதனிடையே, வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்த யூ ட்யூப், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், புகாரளித்த பயனாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
Discussion about this post