பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அமெரிக்க ஊடகம் ஒன்று வெல்டர் என விமர்சித்தது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்ற இம்ரான்கான் அங்குள்ள தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அமெரிக்காவை விட சீனாவின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதாகவும், அமெரிக்க உள்கட்டமைப்பு அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும் விமர்சித்தார்.
இதைக் கேட்டு கோபமடைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இம்ரான்கானை நோக்கி நீங்கள் ஒரு நாட்டின் அதிபரைப் போல செயல்படமால் வெல்டரைப் போல பேசுகிறீர்கள் என நேரடியாகவே விமர்சித்தார். இந்த வீடியோவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.