தேசிய அளவில் பாலின விகிதாச்சார பணிகளைச் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக நாமக்கல் ஆட்சியருக்கு மத்திய அரசு விருது வழங்கபட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய மாநில அரசின் திட்டங்களான பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தைகளை காப்போம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்-பெண் பாலின விகிதாச்சாரம் மேம்பட்டு பெண் குழந்தை பிறப்பு அதிகரித்துள்ளதாகவும், தேசிய அளவில் பாலின விகிதாச்சார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி இந்த விருதினை வழங்கினார். விருது மற்றும் சான்றிதழை ஆட்சியர் ஆசியா மரியம் தமிழக அமைச்சர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Discussion about this post