பாஜக கூட்டணிக்கு கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வர வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே

பாஜக கூட்டணிக்கு கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வர வேண்டும் என்று, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்திருப்பது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே, காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடகா முதலமைச்சராகி இருக்கும் குமாரசாமி மனதுக்குள் அழுதுக் கொண்டிருப்பதாக கூறினார். 350 இடங்களை கைப்பற்றி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என கூறிய அவர், கர்நாடகாவின் நலனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு விட்டு பாஜக கூட்டணிக்கு குமாரசாமி வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அப்படி வந்தால் குமாரசாமிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

பாஜக கூட்டணிக்கு வருமாறு குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்திருப்பது காங்கிரஸ் தலைவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version