மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல்நலக் குறைவால் அதிகாலை 2 மணிக்கு பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 59.
கர்நாடக மாநிலத்திலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்வான அவர், பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர்களில் ஒருவர். இதனால், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அனந்தகுமாருக்கு, உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 59.
அனந்த்குமாரின் மறைவு பா.ஜ.க.வினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தேசிய தலைவர்கள் பெங்களூரு விரைகின்றனர்.