பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய பட்ஜெட் தொடர்பாக பல முக்கிய அறிவுறுத்தல்களை, பிரதமர் மோடி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள், சில நாட்களுக்குள் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post