விடியா திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிக்கப்படாததால், பல ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகியுள்ள நிலையில், வேதனையில் உள்ள மக்களின் பிரச்னைக்கு முடிவுகாலம் எப்போது என கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் நிலத்தடி குடிநீர் வாரிய குழாய்கள் துருப்பிடித்துள்ளதால், நீர் கசிவு மற்றும் பைப் துளைகள் உள்ளிட்ட காரணங்களால், கழிவுநீர் கலந்து குடிநீர் மாசுபடுகிறது. சென்னை தண்டையார்பேட்டை, காசிமேடு போன்ற பகுதியில் குடிநீர் குழாய்களில் வரும் நீரில், சுமார் 27 மடங்கு ஈ கோளி என்ற வைரஸ் உள்ளது.
இதனால் குடிநீர் அருந்த தகுதியற்றதாக உள்ளதாக கூறப்படுகிறது. தனியார் கேன் குடிநீரிலும் ஈ கோளி வைரஸ் வருவதனை யாரும் முறையாக கண்காணிப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 28 மாத காலத்தில், மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணி என்ற போர்வையில், சாலைகளில் தோண்டப்பட்ட கால்வாய்கள் மூடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.
மேலும் மழைக்காலங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் கால்வாய் பணிகள் சரிவர முடிக்கப்படாததன் காரணமாக, இதுவரையிலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை விடியா அரசு புரிந்துகொண்டு செயல்படுமா, இல்லை தோண்டிய கால்வாயை மீண்டும் தரமில்லாமல் அமைத்து கஜானவை நிரப்பும் வேலை மட்டுமே நடைபெறுமா எனவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த பணிகளை யார் ஆய்வு செய்கிறார்கள், உண்மையிலேயே இந்த திட்டம் மழைக் காலத்தில் தேவைதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.