ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால் கேப்டன் பிரியம் கார்க், மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 207 ரன்களிளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் சிங், சித்தேஷ் வீர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Exit mobile version