கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நிமோனியா காய்ச்சல் இல்லை எனவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருகிறார். எனினும் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு நிமோனியா காய்ச்சல் இல்லை என்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரது பணிகளை வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் கவனித்துக் கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. போரிஸ் ஜான்சன் விரைவில் மீண்டு வர விரும்புவதாக இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Discussion about this post