ஆண்டிபட்டியில் தேர்தல் பிரசாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலின் ஆம்புலன்ஸிற்கு வழிவிடாத சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இடைத்தேர்தல் வேட்பாளர் மற்றும் தேனி நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து, திமுகவின் சார்பில் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, முக்கிய வழிச்சாலையை மறித்து உதயநிதி ஸ்டாலின் வெகுநேரம் பேசியதால், சுமார் 1 மணிநேரமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் அவசர சத்தம் எழுப்பிக்கொண்டு வந்த, ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லாமல் வெகுநேரம் காத்திருந்து, ஊர்ந்து சென்றது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திமுகவினரின் மனிதநேயமற்ற செயலுக்கு, ஓர் உதாரணம் என அதிருப்தி தெரிவித்தனர்.
Discussion about this post