கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சதுரங்க வேட்டை படத்தில் ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும் என்பது போன்ற வசனம் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தில், ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்பது போல காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து கதாநாயகன் சிலரை ஏமாற்றுவதுபோல் காட்சிகள் அமைக்கப்படிருக்கும். அதே வகையில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உதயநிதி ஸ்டாலின், திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, கூட்டுறவு சங்கத்தில் 5 சவரன் தங்க நகை தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளதால், நாளையே கடன் வாங்கி நகையை வாங்கிக் கொள்ளுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். பொதுமக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் அமைந்த உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சு மூலம் திமுகவின் உள்நோக்கத்தை அறிய முடிவதாக பொதுமக்கள் கருத்து கூறுகின்றனர்.
Discussion about this post