ஆல்ரெடி சனாதனம் பத்தி பேசி மம்தா திதி, கெஜ்ரிவால் மொதக்கொண்டு உதயநிதிக்கு பாடம் எடுத்துட்டு இருக்காங்க. உங்க பையன கண்ட்ரோல் பண்ணி வைங்கனு இந்தியா கூட்டணி கட்சித் தலைவருங்க எல்லாம் ஸ்டாலினுக்கு அட்வைஸ் பண்ற லெவலுக்கு கொண்டு வந்துட்டாரு உதயநிதி. அப்போ இருந்து இண்டியா கூட்டணிங்குற வார்த்தையே உதயநிதி வாய்ல இருந்து வர மாட்டேங்குது. இப்போ கூட ஒரு கூட்டத்துல பேசுன உதயநிதி, “தமிழகத்தை வெல்லலாம் என சிலர் நினைக்கிறாங்க. இந்தியாவுல எந்த மாநிலத்துல வேணாம் அவங்க ஜெயிக்கலாம். ஆனா, தமிழகத்துல வலுவா ஒரு கூட்டணி அமைஞ்சிருக்கு. அந்த கூட்டணியோட கேப்டன் ஸ்டாலின்னு” மாநில அரசியல்குள்ள மட்டும் தலைய விட்டுட்டு இருக்காரு. தமிழக கூட்டணியோட கேப்டன் ஸ்டாலின்னு பேசியிருக்கீங்களே… இந்த விஷயம் கூட்டணி கட்சிக்காரங்களுக்குத் தெரியுமானு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…
Discussion about this post