திமுக ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தலையீடு இருப்பதாக சமீபத்தில் சச்சரவு ஏற்பட்ட நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது…. தமிழகத்திற்கு தனித்துவமான கல்வி அமைப்பு வேண்டும் என்று குழு அமைக்கப்பட்டது… அந்த குழுவின் மீது பல பகீர் குற்றசாட்டுகளை முன்வைத்து விட்டு விலகியுள்ளார் பேராசிரியர் ஜவஹர் நேசன்…. குழுவில் என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்..
விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகத்திற்கென தனித்த மாநில கல்வி வேண்டும் என்பதற்காக உயர்மட்ட கல்விக்குழு ஒன்றை அமைத்தது….. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைந்த குழுவில் 12 பேர் கொண்ட உறுப்பினர்களாக இருந்தனர். இதில் ஒருங்கிணைப்பாளராகவும் உறுப்பினராகவும் பேராசிரியர் ஜவஹர் நேசனை அமர வைத்தது திமுக அரசு..
நேர்மையான பேராசிரியான ஜவஹர் நேசன் அமெரிக்கா போன்ற நாடுகளில் 20 ஆண்டுகளாக பேராசிரியராக பணி செய்தவர்… அவரை கூட்டி வந்து குடைச்சல் கொடுத்திருக்கிறது விடியா திமுக அரசு. கல்விக்குழு அமைக்கப்பட்டு 11 மாதங்களாக எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்த நிலையில், திடீரென்று அடுத்த மாதமே அதற்கான அறிக்கையை தர வேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்கிறது அந்த குழு.
ஒரு மாநிலத்தின் கல்வியை மாற்றி அமைக்கப்போகும் இந்த திட்டத்திற்கு நிறைய ஆய்வுகள் தேவைப்படுகின்றது என்றும் பல ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை முன்னெடுத்தால்தான் இது சரிப்படும் என்றும் தன் கருத்தை கூறியுள்ளார் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன். ஆனால் இந்த குழுவில் இருக்கும் சில அதிகாரிகள், அவரின் கருத்தை ஏற்கும் நிலையில் இல்லை..
40% உறுப்பினர்கள் ஆர்வமின்மையுடன் செயல்படுகின்றனர், இன்னும் சிலர் ஜவஹர் நேசனுக்கு கடுமையான அழுத்தத்தையும், குடைச்சலையும் கொடுத்திருக்கின்றனர்… தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக இருக்க வேண்டும் என உயர்மட்ட கல்விக்குழுவை அமைத்துவிட்டு, தற்போது தேசிய கல்வி கொள்கையை நோக்கியே அதை செய்யும்படி உந்துதல் கொடுத்து வருகின்றனர்… அதிகாரம் படைத்தவரான உதயசந்திரன் IAS, ஜவஹர் நேசனை தன் அறைக்கு வரவைத்து, தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
தொடர்ச்சியானஅழுத்தங்களுக்கு உள்ளான பேராசிரியர், இது தொடர்பாக 22 ஆதாரங்கள் அடங்கிய ஒரு கோப்பை முதலமைச்சருக்கு அனுப்பிய நிலையில் இரண்டு வாரங்கள் ஆகியும் பதில் இல்லை. மனம் வெதும்பியவர் வரும் தலைமுறைக்கான கல்வி நிலை மோசமாக இருக்க கூடாது என நினைத்து அந்த குழுவில் இருந்து கனத்த இதயத்தோடு வெளியேறிவிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசை எதிர்ப்பது போல நடித்துவிட்டு மற்றொரு பக்கம் இணங்கிப்போகிற போக்கை ஜவஹர் நேசனின் விலகல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும் மாநிலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை, ஐஏஎஸ் அதிகாரிகள்தான் ஆட்சி செய்கின்றனர் என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
– செய்தியாளர் கோபால் மற்றும் பாலா துரைசாமி.
Discussion about this post