உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சர் அல்ல, விளையாட்டுப் பிள்ளை அமைச்சர் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு பேசியுள்ளார்.

விளையாட்டு அமைச்சர் உதயநிதி விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார். மூத்த அரசியல் தலைவர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தொடர்ந்து விமர்சிப்பது அவரது முதிர்ச்சியின்மையை காண்பிக்கிறது. வழக்குகளுக்கு அஞ்சாதவர்கள் அதிமுகவினர் என்றால், வழக்குகளிக்கு அஞ்சுபவர்கள் திமுகவினர்.

சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்களை காக்க திமுக அரசு தவறிவிட்டது, 5 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் மீனவர்களை வஞ்சிக்கிறது இந்த அரசு. அதிமுக ஆட்சியில் மீனவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்.

மேலும் பேசிய அவர் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடும், மருத்துவர்கள் தட்டுப்பாடும் உள்ளதாக  குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகளும், மருத்துமுறைகளும் இருப்பதால் அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இழந்துவிட்டார்கள் எனவும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கட்ட அம்மா மினி க்ளினிக்குகள் மூடப்பட்டதே போலி மருத்துவர்கள் அதிகரிப்பதற்கு காரணம் எனவும் தமிழகத்தில் போலியாக ஆட்சி நடத்திவருபவர்களால் போலி மருத்துவர்களை எப்படி கண்டறிய முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வியுள்ளார்.

கஞ்சா, பிரவுன் சுகர் விற்பனை தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. சமூக விரோதிகள் தமிழகத்தில் துளிர விட ஆரம்பித்து விட்டனர். திமுகவினரே சட்டத்தை கையில் எடுத்து சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்கின்றனர். இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதை முதல்வர் நினைக்க வேண்டும். முதல்வருக்கே நாட்டில் என்ன நடக்குது என்று தெரியாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக இருந்தால் நாடு கெட்டு குட்டிச்சுவராக தான் போகும்.

Exit mobile version