கிருஷ்ணகிரி அருகே கனமழையால் அறுந்து விழுந்த மின் கம்பியில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவேரிப்பட்டினத்தை அடுத்த கால்வேஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரும் அவரிடம் பணிபுரியும் சரவணன் என்பவரும் இரு சக்கர வகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கத்தேரி பிரிவு ரோடு அருகே மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியில் வாகனம் உரசியது. இதையடுத்து இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.