சென்னை வியசார்பாடியில் நகை வாங்குவது போல நடித்து மோதிரங்களை விரல்களில் மாட்டிக் கொண்டு தப்பிச் சென்ற கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வியசார்பாடி இ.எச்.சாலையில் சுதர்சனம் என்பவருக்கு சொந்தமாக நகை கடை உள்ளது. இதில் சில தினங்களுக்கு முன், நான்கு பேர் கொண்ட கும்பல், நகைக் கடை அருகே பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அதில் இரண்டு பேர் நகைக்கடையினுள் நுழைந்து மோதிரம் வாங்குவது போல் நடித்து, மோதிரங்களை விரல்களில் மாட்டிக்கொண்டு, உரிமையாளரை தாக்கிவிட்டு தப்பி ஓடினர்.
மூன்றரை சவரன் நகையை திருடிச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்த காவல்துறையினர், வியாசர்பாடியை சேர்ந்த சரவணன் மற்றும் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த அன்சர் அலியை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
Discussion about this post