கடலில் படகு மூழ்கியதில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்களின் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடலூரில் புதிய ஃபைபர் படகை வாங்கிக் கொண்டு ராமேஸ்வரத்துக்கு வந்து கொண்டிருந்தனர். புதன்கிழமை அதிகாலை மல்லிபட்டினத்தில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நடுக்கடலில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக ஃபைபர் படகு நடுக்கடலில் மூழ்கியது. 10 பேர் சென்ற கப்பலில் 4 பேர் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணி தொடர்ந்து 4-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடலில் மிதந்து கொண்டிருந்த 2 பேரின் உடல்கள் கடலோர காவல்படைக்கு சொந்தமான பிரியதர்ஷினி ரோந்து கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.