டிக்டாக்கில் கானா பாடல் ஒன்றிற்கு கத்தியை காட்டியும், காவல் நிலையத்தை தவறாக சித்தரித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, மற்றும் கோவிந்தன்ஆகிய இருவரும் அதே பகுதியில் கறிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடையில் உள்ள கறி வெட்டும் கத்தியை கையில் வைத்துக் கொண்டு டிக்டாக்கில் கானா பாடல் ஒன்றை பாடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் காவல் நிலைய வீடியோவையும் கானா பாடலுடன் சேர்த்து பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிய நிலையில், காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இரண்டு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.