விழுப்புரத்தில் இருந்து சென்னை வரையிலான குளிர்சாதனப் பேருந்து சேவையை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு சொகுசுப் பேருந்துகள் விழுப்புரம் – சென்னை மார்க்கத்தில் இயக்கப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் இந்தப் பேருந்துகள், தனியார் சொகுசுப் பேருந்துகளில், உள்ள வசதிகளை மிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும் சாதாரண கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சி.வி. சண்முகம், பேருந்தில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தார். மேலும் பேருந்தில் சிறிது தூரம் அமர்ந்து அவர் பயணம் செய்தார்.
Discussion about this post