ட்விட்டர் பயன்பாட்டாளர்களின் கோபத்தில் McDonalds…

McDonalds நிறுவனம் ஹலால் முறையில் இறைச்சியை பயன்படுத்துகிறோம் என ட்விட்டரில் கூறியிருந்ததை அடுத்து, தற்போது boycottMcDonalds என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் பலரும் fastfood,pizza,burger-யே சாப்பிட விரும்புகின்றனர்.அதில் அனைவரும் விரும்பி செல்லும் இடம் McDonalds,dominos ஆகும்.இந்நிலையில் McDonalds நிறுவனமானது நேற்று தனது ட்விட்டர் பக்கதில் ஒரு பதிவிட்டுள்ளது.’எங்கள் உணவகங்களில் நாங்கள் பயன்படுத்தும் இறைச்சி மிகவும் உயர்ந்த தரம் வாய்ந்தது மற்றும் HACCP சான்றிதழ் பெற்ற அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்து பெறப்படுகிறது.மேலும், எங்களின் அனைத்து உணவங்களிலும் ஹலால் சான்றிதழ்கள் உள்ளன.உங்களின் திருப்திக்காக உணவக மேலாளரிடம் சான்றிதழை காட்ட சொல்லியும் கேட்கலாம்’ என பதிவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து பலரும் McDonalds-க்கு எதிராக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை ஹலால் இறைச்சியை உண்ண McDonalds கட்டாயப்படுத்துகிறது. ஒவ்வொரு கடையிலும் ஹலால் முறையில் தயாரிக்கப்படுகிறது என்ற தகவலை அவர்கள் முக்கியமாகக் காட்ட வேண்டும் என பலர் தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

 

சிலர் McDonalds க்கு bye-bye சொல்லி செல்கின்றனர்.

 

 

 

தற்போது #boycottMcDonalds என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Exit mobile version