ட்விட்டரில் மீண்டும் ப்ளூ டிக் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்லது. இதற்கான விண்ணப்ப பகுதி, பயனாளிகளின் ட்விட்டர் செட்டிங் பகுதியில் தோன்றத் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அமைப்பு, நிறுவனங்கள், பிராண்டுகள், செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள், திரைப்படத்துறையினர், விளையாட்டு மற்றும் கேமிங் புள்ளிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இதர செல்வாக்காளர்கள் ஆகிய பிரிவினர் இந்த நீல டிக் வசதியை பெறலாம்.
இந்தப் பட்டியலில் கல்வியாளர்கள் மற்றும் டாக்டர்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ட்விட்டர் குழுவால பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். நிராகரிக்கப்பட்டால் 30 நாட்கள் கழித்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.