துருக்கியின் அதிபராக பதவிப் பிரமாணம் செய்தார் எர்டோகன்!

துருக்கியின் அதிபராக டயாப் எர்டோகன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வானது துருக்கியின் பாராளுமன்றம் அமைந்துள்ள அங்காராவில் நடைபெற்றது.

பதவியேற்கும் போது, நான்,ஒரு அதிபராக, துருக்கி நாட்டின் மரியாதையையும், கண்ணியத்தையும், வரலாற்றையும் , சுந்திர இருப்பினையும் காப்பேன் என்று உறுதிமொழியளித்தார். அவரது உறுதிமொழியானது நாட்டு மக்கள் காணும் வண்ணம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. எர்டாகன் பதவிப்பிரமாணம் செய்யும் முன் இடைக்கால சபாநாயகரிடமிருந்து அதிபருக்கான ஆணையைப் பெற்றுக் கொண்டார்.

எர்டோகனைப் பொறுத்தவரை துருக்கியின் மிக நீண்டகால அதிபராக செயல்பட்டு வருகிறார். கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் தேர்தலில் 52.2% வாக்குப் பெற்று வெற்றி பெற்றார். அவரது இந்த பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் 78 நாடுகளைச் சேர்ந்த முக்கியமான நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என்று பலர் பங்கேற்றனர். முக்கியமாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் கலந்துகொண்டார். தன்னுடைய அமைச்சரவையை வருகின்ற சனிக்கிழமை அன்று எர்டோகன் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், துருக்கி வழிவழியாக திட்டமிட்டு செயல்படுத்தும் பொருளாதார கொள்கை மாற்றி அமைக்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவருகிறார்கள்.

Exit mobile version