துருக்கியில் நிலநடுக்கம் – 50 பேருக்கு மேல் இறப்பு!

இன்று அதிகாலை துருக்கியில் ஒரு வலிமையான நிலநடுக்கம் நடந்துள்ளது. அதன் அளவு 7.9 ரிக்டர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கமானது துருக்கியின் தெற்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை நடந்தேறியுள்ளது. வீடுகள், கட்டிடங்கள், சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய சேதத்தினை சந்தித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தன்மையினை சைப்ரஸ், லெபனான் மற்றும் சிரியா போன்ற நாடுகளும் உணர்ந்துள்ளன. ஜெர்மன் ரிசர்ஜ் சென்டர் என்கிற ஜியோசைன்ஸ் நிறுவனம் இந்த நிலநடுக்கத்தினைப் பற்றி கூறும்போது, இந்த நிலநடுக்கம் துருக்கியின் தெற்பகுதியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் கஹ்ரமன்மராஸ் எனும் பகுதியில் ஏற்பட்டுள்ளது. மேலும் இது சுனாமியின் அறிகுறி என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து துருக்கியின் தெற்குபகுதிலுள்ள சான்லியுர்ஃபா மாகாணத்தின் கவர்னர் சலிஹ் அய்ஹன் டிவிட்டரில், ‘நாம் இடிபாடுகளுடைய கட்டிடங்களைப் பெற்றுள்ளோம்” மற்றும் மக்களை உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நிலநடுக்கம் ஏற்பட்டப் பகுதியானது துருக்கியின் எல்லையில் அதாவது சிரியாவிற்கு அருகில் உள்ளப் பகுதியாகும். எனவே துருக்கி விரைந்து தனது பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினை அனுப்பியிருக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஐம்பதிற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

Exit mobile version