துருக்கியில் கடந்த திங்கட்கிழமை 7.8 மற்றும் 7.4 ஆகிய ரிக்டர்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. பிறகு அடுத்த நாள் செவ்வாய் கிழமையில் 5.5 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் துருக்கியில் 6000த்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து பிரளயமே உண்டனாது. கிட்டத்தட்ட மக்களின் இறப்பு எண்ணிக்கை 33,000த்தை தொட்டது. கடுமையான உறைபனி சூழலுக்குள்ளும் தொடர்ந்து மீட்புக்குழுவினர் தனது மீட்புப் பணியினைத் திறம்பட செய்து வருகிறார்கள். அவர்களின் செயலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிறந்து 2 மாதமே ஆன குழந்தை ஒன்று 128 மணி நேரத்திற்கு பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டது. இது 5 நாள் மற்றும் 8 மணி நேரமாகும். இதன் மூலம் துயரிலும் நம்பிக்கைப் பிறந்துள்ளது.
துருக்கியில் மட்டும் 29,695 நபர்களும், சிரியாவில் மட்டும் 3500 பேர்களும் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் மோசமான பேரழிவாக கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கம் துருக்கியில் 1939ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை விட மிகவும் கொடூரமானது. மேலும் துருக்கியின் தெற்கு மாகாணத்தில் உள்ள கடை நடத்துபவர்கள் அவர்களின் இடத்தை காலி செய்து இடம்பெயர்ந்து வருகிறார்கள்.