துருக்கியில் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய இரு தினங்களிலும் மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் முறையே 7.8, 7.4, 5.5 ஆகிய ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் தெற்கு மாகாணங்களில் நடந்தது. பிறகு சிரியாவின் வடக்கு பகுதியினையும் இந்த நிலநடுக்கம் பாதித்தது. கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து மக்கள் இடிபாடுகளில் சிக்கி இறக்கிறார்கள். மீட்புக்குழுக்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இறப்பின் புள்ளிவிவரம் அதிகரித்த வண்னம் உள்ளது. இன்றைய நிலவரப்படி 21000 பேர் இறந்துள்ளார்கள்.
துருக்கியில் 18000 பேரும், சிரியாவில் 3000 பேரும் இறந்துள்ளனர். இது பனியும் பிணியும் பசியினாலும் மக்கள் கொத்துகொத்துகாக இறக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் உள்ள இடிபாடுகளை அகற்றினால் எத்தனை உயிர்கள் போயிருக்கின்றன என்று தெரியவரும். சிறு குழந்தைகளும் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர்.