துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

துருக்கியில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் அளவு 7.9 ரிக்டர் அளவு என்று பதிவாகியிருந்தது. காலை 50 பேரிலிருந்து 500 பேர் வரை இறந்திருந்தனர். பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகின. அந்நாட்டு மீட்புக்குழுவினர் மக்கள்களை அபாயப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்புறப்படுத்தும் பணி இப்போது வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திடீரென்று பார்த்தால் தற்போது இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது. இதன் ரிக்டர் அளவு 7.5 என்று பதிவாகியுள்ளது. இதன் மூலம் 912 பேர் இறந்துள்ளதாக துருக்கி நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் காலையில் இருந்து கணக்கிட்டால் 1300க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. துருக்கியின் தென்பகுதில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தற்போது படிப்படியாக பரவி வருகிறது. 5,383 பேருக்கு காயம் மற்றும் 2,818 கட்டிடங்கள் இடிந்துள்ளன என்று அந்நாட்டு அதிபர் டயிப் எர்டோகன் தகவல் தெரிவித்துள்ளார். துருக்கியின் தென்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சிரியாவிற்கும் பரவியுள்ளது. அங்கேயும் 147 பேர் வரை இறந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version