துருக்கியின் தெற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது மிகப்பெரிய அளவிற்கு உயிர்சேதத்தினை ஏற்படுத்தி வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கமானது படிப்படியாக சிரியாவின் வடபகுதி வரை தொடர்ந்தது. தினந்தோறும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல்களைத் தேடும் பணி விரைவாக செயல்பட்டு வருகிறது. பல நாடுகளில் இருந்து மீட்புக் குழுவினர் வந்துள்ளனர். தொடர் பனி மற்றும் பசி ஆகியவற்றினாலும் மக்கள் உயிரிழக்கின்றனர். இன்றைய அதிகாலைத் தகவலின் படி துருக்கியில் மட்டும் 22,327 பேர் இறந்துள்ளனர். மேலும் சிரியாவில் மட்டும் 3500 பேர் இறந்துள்ளனர்.
கிட்டத்தட்ட நூறாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வீடின்றி நடுத்தெருவில் நிற்கின்றனர். துருக்கியின் பிரதமர் எர்டோகன் விரைவில் துருக்கியினை மீட்டுருவாக்கம் செய்வோம் என்று நாட்டு மக்களிடையே தெரிவித்துள்ளார்.