1000 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு…துருக்கி நிலநடுக்கம்…7800 பேர் மரணம்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலநடுக்கமானது பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலியாக்கியுள்ளது. இன்றைய புள்ளிவிவரத்தின்படி 7,800 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக துருக்கியில் மட்டும் 5,894 பேரும், சிரியாவில் 1,900 பேரும் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட 1000த்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளனர். 6000த்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளன. இந்தியா உட்பட பல உலகநாடுகள் தங்களுடைய பாதுகாப்பு மற்றூம் மீட்புக்குழுவினை அனுப்பியுள்ளது.

துருக்கி பிரதமர் எர்டோகன் நாட்டின் பத்து மாகாணங்களில் அவசரநிலையினைப் பிறப்பித்துள்ளார். 1999 ஆம் ஆண்டிற்கு பிறகு துருக்கி சந்திக்கும் மிகவும் மோசமான காலநிலை மாற்றம் இதுவாகும். மேலும் துருக்கி மற்றும் சிரியாவில் பனிப்பொழிவுத் துவங்கியுள்ளதால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் மீட்புக் குழுவினர்கள். இன்னும் மூன்றுமாதங்களில் துருக்கியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிஅலியில் இந்த நிலநடுக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிக் குறித்து ஜெனிவாவில் உள்ள உலக நல அமைப்பின் இயக்குநர் அதனோம் ஜ்ஹேப்ரெயேசஸ் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணி நேரமும் கடந்து போய்க்கொண்டிருக்கிறது, ஒவ்வொருவரையும் தேடுதல் பணி தொடர்ந்து விரைவாக நடந்த வண்ணம் உள்ளது என்று தெரிவித்தார்.

Exit mobile version