சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில், 51 வயது பெண்ணிற்கு வயிற்றில் இருந்த 20 கிலோ கட்டி அகற்றப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் 51 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து, 20 கிலோ எடையுள்ள சினைப்பைக் கட்டி நீக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் இயக்குனர் சம்பத்குமாரி, தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் பரவி இருந்த 20 கிலோ எடையிலான கட்டி உடையாமல் வெளியில் எடுக்கப்பட்டதாகவும், இதுபோன்ற சினைப்பை கட்டிகள் குறித்து, ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு சென்று அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.