உடுமலையில் டிடிவி தினகரன், பள்ளிக் குழந்தைகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது, பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் டிடிவி தினகரன் பொள்ளாச்சி நாடாளுமன்ற சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது சீருடையணிந்த பள்ளி குழந்தைகளை கைகளில் பரிசு பெட்டியோடு, உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த டிவைடரில் நிற்க வைத்திருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Discussion about this post