தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் விதியை மீறி சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற டிடிவி தினகரன் ஆதரவாளர்களால் மக்கள் அவதியடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தேர்தலுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் டிடிவி தினகரனின் பிரசார கூட்டம் ஒடசல்பட்டி இணைப்புச் சாலையில் நடைபெற இருந்தது. அதற்காக பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களை கூட்டத்திற்கு அழைத்து வருவதற்கு சரக்கு வாகனங்களின் மூலம் ஏற்றப்பட்டனர்.
கடும் நெரிசலுக்கு மத்தியில், எந்த ஒரு வசதிகளும் இன்றி பொதுமக்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு அலைக்கடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு 9.50 மணிக்கு வரும் டிடிவி தினகரனுக்காக, மாலை 6 மணியில் இருந்து பொது மக்களை காக்க வைத்திருந்தது அங்குள்ள மக்களை அதிருப்தியடையச் செய்தது. .